பாறு நலன் காக்கும் கால்நடை முதலுதவி பெட்டி திறப்பு விழா 24-Nov-2025

இடம் : தெங்குமரஹடா, கோத்தகிரி தாலுகா, நீலகிரி மாவட்டம்

ஏற்பாடு : அருளகம் – இயற்கைப் பாதுகாப்பு அமைப்பு

பங்கேற்றவர்கள்:

மண்டல இணை இயக்குநர் – திரு வி. பாலகிருஷ்ணன்

துணை இயக்குநர் – திரு கே. பரிமல்ராஜ்

அல்லிமாயாறு கால்நடை மருத்துவர் – டாக்டர் அர்ஷத்

தெங்குமரஹடா உயர் நிலைப் பள்ளி ஆசிரியர் – திரு காசிராஜன்

அருளகம் பழங்குடிகள் நலத்திட்ட மேலாளர் – திரு ஜேபஸ் ஜான்

கால்நடை நலன் காக்கும் ஒருங்கிணைப்பாளர் – திரு பரமன்

அருளகம் உயிரியலாளர் – திருமதி சுந்தரி அருளகம் சமூகவியலாளர் – திருமதி ரேவதி

ஓவியக் கலைஞர் – திரு சந்தோஷ்

கிராம மக்கள் – 31 பேர் (11 பெண்கள், 22 ஆண்கள்)

நீலகிரி மாவட்டத்தின் கோத்தகிரி தாலுக்கில் உள்ள தெங்குமரஹடா கிராமத்தில், அருளகம் இயற்கைப் பாதுகாப்பு அமைப்பு சார்பாக பாறு நலன் காக்கும் கால்நடை மருத்துவ முதலுதவி பெட்டி திறப்பு விழா மற்றும் பாறுக் கழுகு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நீலகிரி மண்டல கால்நடை இனை இயக்குநர் திரு வி. பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கால்நடை வளர்ப்பவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

அருளகம் அமைப்பின் கால்நடை நலன் ஒருங்கிணைப்பாளர் திரு பரமன் அவர்கள், அருளகத்தின் பாறுக் கழுகு பாதுகாப்பு பணிகள் மற்றும் அதன் சமூக முக்கியத்துவத்தை விளக்கி அனைவரையும் வரவேற்றார். துணை இயக்குநர் திரு பரிமல்ராஜ் அவர்கள், பாறுக் கழுகுகள் பார்சி இன மக்களுடன் தொடர்புடைய பாரம்பரிய நடைமுறைகளையும், அவை எப்படி கழுகுகளின் உணவுச் சங்கிலிக்கு பயன்படுகின்றன என்பதையும் எடுத்துரைத்தார்.

பாறுக் கழுகு பாதுகாப்பு மற்றும் மருந்து விழிப்புணர்வு

அருளகம் உயிரியாளர் திருமதி சுந்தரி அவர்கள், பாறுக் கழுகுகள் இயற்கையின் துப்புரவுப் பணியாளர்கள் என்பதையும், இறந்த விலங்குகளை உண்பதன் மூலம் நோய் பரவலை தடுக்கின்றன என்பதையும் எடுத்துரைத்தார். கழுகுகளின் உணவுச்சங்கிலியில் தீங்கு விளைவிக்கக் கூடிய அசிக்ளோஃபினாக், கீட்டோபுரோபின், நிமெசுலைடு போன்ற மருந்துகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அதற்கு மாற்றாக அரசால் பரிந்துரைக்கப்பட மெலாக்ஸிகம் மற்றும் டோல்பினாமிக் ஆசிட் ஆகிய  மருந்துகளைப் பயன்படுத்துமாறும்  மற்றும் சித்த மருந்துகளைப் பயன்படுத்துமாறும் பரிந்துரைத்தார். மேலும், இயற்கையாக இறந்த கால்நடைகளை புதைக்காமல், காட்டுப் பகுதியில் வைக்கும்போது பாறுக் கழுகுகளுக்கான உணவு கிடைக்கும் எனவும் எடுத்துரைத்தார்.

அருளகத்தின் சமூகவியலாளர் திருமதி ரேவதி அவர்கள், தெருக்கூத்து, சுவர் ஓவியங்கள், கல்வி காணொளிகள், பள்ளி மாணவர்களுக்கு ஓவியம் போன்ற சமூக விழிப்புணர்வு நடவடிக்கைகளை அருளகம் முயற்சி செய்து வருகிறது என்று விளக்கினார்.

டாக்டர் புன்னியமூர்த்தி அவர்களின் பரிந்துரையின் கீழ், வீட்டு அடுக்களையில் பயன்படுத்தும் சமையல் பொருட்களையும் மூலிகைகளையும் பயன்படுத்திக் கால்நடை முதலுதவி செய்வது மற்றும் YourFarm என்ற பாதுகாப்பான கால்நடை மருந்துகளைப் பயன்படுத்துவது குறித்து  விளக்கங்கள் வழங்கப்பட்டன.

நீலகிரி மண்டல கால்நடைத்துறை இணை இயக்குநர் திரு வி. பாலகிருஷ்ணன் அவர்கள், தெங்குமரஹடா ஊர் ஒரு செழிப்பான இயற்கை கிராமம் என்பதையும், பாறுக் கழுகுகள் பாதுகாப்பில் தடை செய்யப்பட்ட மருந்துகள் மிக முக்கிய அச்சுறுத்தல் என்பதையும் விழிப்புணர்வு தொடர்ச்சியாக மக்கள் மூலம் நடைபெற வேண்டும் என்பதையும் இப்பணியைத் தொடர்ந்து அருளகம் மேற்கொண்டுவரவேண்டும் என்றும் தெரிவித்தார்.

தெங்குமரஹடா உயர்நிலை பள்ளி ஆசிரியர் திரு காசிராஜன் அவர்கள் பறவைகள் பற்றி எடுத்துரைத்து  பாறுக் கழுகுகளின் உணவுச் சங்கிலி முறையைக் கூறி அதன் சிறப்பு அம்சங்களை எடுத்துரைத்தார்.

அருளக்தின் பழங்குடிகள் நல ஒருங்கிணைப்பாளர், திரு ஜான் அவர்கள் பேசும்போது, இவ்வகைக் கழுகுகளைப் பிணந்திண்ணிக் கழுகுகள் எனப் பொதுவாக அழைக்கபடுவதாகவு அப்படிக் கூறும் போது பிணம் என்ற பெயர் அவச்சொல்லாக‌ இருப்பதால், இப் பறவை இழிவாகப் பார்க்கப்படுவதாகச் சுட்டிக்காட்டினார். எனவே சங்க இலக்கியத்தில் குறிப்பிட்டுள்ள ‘'பாறு என்ற சொல்லைப் பயன்படுத்தி வருவதாகத் தெரிவித்தார். அருளகம் வழங்கிய கால்நடை முதலுதவி பெட்டியை கிராமத்தில் வைத்து பயன்படுத்த கிராம மக்கள்  தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தினர். இறுதியாக சுந்தரி, ரேவதி மற்றும் சந்தோஷ் ஆகியோர் பாறு கழுகு குறித்த விழிப்புணர்வுத் துண்டறிக்கைகளை மக்களுக்கு வழங்கினர்.

மண்டல இணை இயக்குநர் – திரு வி. பாலகிருஷ்ணன், துணை இயக்குநர் – திரு கே. பரிமல்ராஜ், கால்நடை மருத்துவர் – டாக்டர் அர்ஷத் ஆகியோருக்குத்  தேங்காய் ஓடுகளால் வரையப்பட்ட பாறு கழுகு ஓவியம்  நினைவுப் பரிசாக அதனை வரைந்த ஓவியர் சந்தோசு அவர்களால் வழங்கப்பட்டது.

கால்நடைகளுக்குத் தடை செய்யப்பட்ட வலி மருந்துகள் தரப்படுவதைத் தடுக்கத் துல்லியத்தாக்குதலாக இம்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது எனத்தெரிவித்தார். இங்கு வைக்கப்பட்டுள்ள முதலுதவிப் பெட்டியில் யுவர்பார்ம் தயாரித்த பாரம்பரிய மருந்துகளும் மெலாக்சிகம், டோல்பினாமிக் ஆசிட் போன்ற மருந்துகளும் உன்னிக்கடி மருந்துகளும் இடம்பெற்றுள்ளன எனத்தெரிவித்தார்.

 

Arulagam at Wayanad Bird Festival 2025

Our team was at the Wayanad Bird Festival (Nov 2025) where Arulagam along with the Kanavu Vezhi team used theatre performances to share the message on Vulture Conservation.

 

 

Thanks to the coverage of the festival and our performance by Down To Earth magazine (Article by KA Shaji)

"A theatrical piece by Tamil Nadu’s Arulagam team on vulture conservation struck a chord with Wayanad’s own fears around scavenger decline and forest degradation."

https://lnkd.in/eAqFz8BA 

 

 

Sowing 2000 Palm Seeds in Rameswaram Island | Sand Dunes Conservation | Nov 5th 2025

With the support of school students we sowed 2000 Palm Seeds to protect Sand Dunes on Rameswaram Island

NSS students of the Rameswaram Thangachimadam Higher Secondary School in collaboration with Arulagam carried out a palm tree planting ceremony in the Arulmigu Muniyasamy Temple premises belonging to the Hindu Religious & Charitable Endowments Department. 

This project, which was carried out with the initiative of the Tamil Nadu Government, was led by the Secretary of the Arulagam, Su. Bharathidasan, the NSS officer of Thangachimadam Higher Secondary School, Mr. Sundar, Assistant Project Officer Mr. Senthilkumar, and the Project Coordinator of the Arulagam, Mr. Pon. Natarajan.

Today, 90 students joined hands to plant 2000 palm seeds. They also planted 300 trees native to the Neithal landscape.

The necessary arrangements for this event were made by Mr. Anbu and Mrs. Rani on behalf of the Arulagam. At the end of the event, everyone came together and took a pledge to protect the sand dunes.

இராமேசுவரம் தீவில் 2000 பனை விதை நடவு விழா | நவம்பர் 5 2025

இராமேசுவரம் தங்கச்சிமடம் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் அருளகம் அமைப்புடன் இணைந்து  இந்துசமய அறநிலையத்திற்கு சொந்தமான அருள்மிகு முனியசாமி கோவில் வளாகத்தில் பனை நடவை இன்று மேற்கொண்டனர். தமிழ்நாடு அரசின் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்ட

இத்திட்டத்தினை அருளகம் செயலர் சு. பாரதிதாசன், தங்கச்சிமடம் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித்திட்ட திட்ட அலுவலர்,  திரு.சுந்தர் உதவித் திட்ட அலுவலர் திரு.செந்தில்குமார்,  அருளகத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. பொன். நடராசு ஆகியோர் வழி நடத்தினர். 

 


 
இன்று 90 மாணக்கர்கள் இணைந்து 2000 பனை விதைகளை நட்டனர். தொடர்ந்து  நெய்தல் சூழலுக்கேற்ற 300 மரச்செடிகளையும் நட்டனர்.  

இந்த நிகழ்வுக்கு தேவையான ஏற்பாடுகளை  அருளகம் சார்பில் திரு. அன்பு, திருமதி இராணி ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்வின் இறுதியில் அனைவரும் ஒன்றிணைந்து மணல்மேடுகள் பாதுகாப்பு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

பழனிமலைப் பாதுகாப்புக் குழுமத்தின் முன்னாள் செயலர் திரு. கண்ணன் இயற்கை எய்தினார்

அன்பு நண்பர்களுக்கு,

இன்று அதிகாலையில் (4-11-2025) மேக்மோகன் அவர்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. பழனிமலைப் பாதுகாப்புக் குழுமத்தின் முன்னாள் செயலர் கண்ணன் சார் இயற்கை எய்தினார் என்ற தகவலை அவர் சொன்னபோது என்னால் நம்ப முடியவில்லை. காரணம், நேற்றுக் காலை 9.45 மணியிலிருந்து 11.45 மணிவரை பட்டிவீரன்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் அவரைச் சந்தித்துச் சுமார் இரண்டு மணி நேரம் உரையாடினோம். 

அவரைப் பார்க்கச் சென்றபோது, ஐசக்கெகிம்கர் எழுதிய இந்தியப் பட்டாம்பூச்சிகள்  ‘The Book of Indian Butterflies’- by Isaac Kehimkar’s )என்ற நூல்  அவரது மேசையில் இருந்தது. நலம் விசாரித்த பின்னர் எங்களது உரையாடல் சுற்றுச்சூழல் நோக்கித் திரும்பியது…கடல்மட்டம் உயர்ந்து வருவது, தூண்டில் வளைவின் தாக்கம், பட்டாம் பூச்சிகள், தேனீ வளர்ப்பு, தாய்லாந்துப் பயணம், இலங்கைப் பயணம், பேரப் பிள்ளைகள், மழைப் பொழிவில் ஏற்படும் மாற்றங்கள், ஆள் பற்றாக்குறை காரணமாக தனது அப்பா அடித்த களைக்கொல்லி மருந்துகளின் தாக்கம், இளந்தலைமுறைகள் வெளிநாட்டுப் படிப்பை நாடிச் செல்வது என உரையாடல் நீண்டது. இலங்கைக்கு திருவாளர் ஸ்ரீஸ் கந்தராசா அழைப்பின்பேரில் சென்று வந்த பயணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு சென்று வந்தது, சுவீடனிலிருந்து இயங்கும் தேனீக் கூட்டமைப்பில் உறுப்பினராக இருப்பது  என உரையாடல் தொடர்ந்தபடி இருந்தது.  

தான் சிறு வயதாக இருந்தபோது சென்னையில் உள்ள அத்தை வீட்டிற்குச் செல்வோம். அப்போது மெரீனா கடல் சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் இருந்ததாகவும் தற்போது சிறிது நடந்த உடனேயே வந்துவிடுவதாகவும் அவர் சொன்னபோது நானும் அதை யோசித்துப்பார்த்து ஆமோதித்தேன். 

உணவு குறித்துப் பேச்சு வந்தபோது, என்  ஒருவனுக்காக தினம் சமைக்க வேண்டாம் எனக்கூறி விட்டதாகவும் அதனால் இரண்டு நாளைக்கு ஒரு முறை மட்டும் சமையல்காரப்பெண்மணி வந்து சமைத்துவைத்துவிட்டுச் சென்று விடுவார் என்றும் சோறு மட்டும் அவ்வப்போது சூடாக வைத்துக்கொள்வேன் என்றும் 67 வயது முடியப்போகிறது. கொஞ்சம் தான் சாப்பிட முடிகிறது என இயல்பாகப் பேசினார். 

இலங்கைப் பயணம் குறித்துப் பேசியபோது, நம் ஊரில் வளரும் பொரசு மரத்தை விட இலங்கையில் வளரும் பொரசு மரம் சுற்றளவில் மூன்று மடங்குப் பெரிதாக இருப்பதாகவும் தெரிவித்தார். இம்மாத இறுதியில் International Pollution Elimination Network அமைப்பின் அழைப்பின் பேரில் இலங்கை செல்லும் வாய்ப்பு எனக்கு உள்ளதாகவும் அப்போது நீங்களும்  வரலாமா என அவரிடம் கேட்டேன். ஓரிரு நாளில் திருவாளர் ஸ்ரீ யுடன் பேசிவிட்டுச் சொல்கிறேன் என்றார். எனது தாயாரும் உடன் இருந்ததால் அவருக்கு அலுப்பாகிவிடும் என்று உரையாடலை இடை நிறுத்திவிட்டு நானும் இராமேசுவரத்தில் நடைபெறும் மரக்கன்றுகள் நடும் பணியில் கலந்துகொள்வதற்காகப் போகவேண்டும் என்று கூறி விடைபெற்றேன். 

கிளம்பும் போது தனது எஸ்டேட்டில் விளைந்த மருந்து அடிக்காத பழங்கள் எனக் கூறி மூன்று ஆரஞ்சுப்பழங்களை எனது பையில் திணித்தார். பேருந்துப் பயணத்தில் சன்னல் ஓர இருக்கையில் அமர்ந்திருந்ததால் நண்பகல் வெயில் சுளீர் எனத்தாக்கியது. நாவறண்டது. பையிலிருந்து அவர் தந்த ஆரஞ்சுப் பழங்களைச் சுவைத்தபோது கொஞ்சம் பல் கூசியது. புதுத் தெம்பாகவும் இருந்தது. உடனே கையைத் துடைத்துவிட்டு எனது அலைபேசியை எடுத்துப் பழங்கள் அருமை உங்களுடன் உரையாடியதும் நன்றாக இருந்தது எனக் குறுஞ்செய்தி அனுப்பினேன். இது தான் நான் அவருக்கு அனுப்பும் கடைசிச் செய்தியாக இருக்கும் எனத் துளியும் நினைக்கவில்லை.

திரு. கண்ணன் (வயுது 67) அவர்கள் படித்ததோ மருந்தியல். ஆனால் தாவரங்கள் குறித்த தேர்ந்த புலமை மிக்கவராக இருந்தார். பட்டாம் பூச்சிகள் தேன் எடுக்க நாடும் தாவரங்கள், பட்டாம்பூச்சிகள் உணவாக்கும் தாவரங்கள் என பல்வேறு விசயங்களும் அவருக்கு அத்துப்படி. பொருளாதார நோக்கிலும் மரக்கன்றுகள் வளர்ப்பது குறித்து ஆழ்ந்த புலமையுடையவராக இருந்தார்.

இடிந்தகரையில் மரம் நடும் பணியிலிருந்தபோது அதை மேற்பார்வையிட ஆய்வாளராக வந்து தவறுகளைச் சுட்டிக்காட்டுவார். அவரிடமிருந்து நிறையப் படிப்பினைகளை நான் பெற்றேன். 

என்னிடம் அவர் நினைவு கூர்ந்த ஒரு சம்பவத்தைப் பகிர விரும்புகிறேன். 2007 ஆம் ஆண்டு கடற்கரையோரத்தில் மரக்கன்றுகள் நடுவதற்காகப் பல்வேறு நிறுவனங்கள் திட்ட அறிக்கை சமர்ப்பித்திருந்தன.  அருளகமும் சமர்ப்பித்திருந்தது. நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அவர் இருந்தார். அந்தக் கூட்டத்தில் கோயமுத்தூரில் இருக்கும் அருளகம் எப்படித் திருநெல்வேலியிலுள்ள இடிந்தகரையில் மரம் நட முடியும் எனத் தான் கேட்டதாகவும் உங்களது களச் செயல்பாட்டைப் பார்த்தபின்னர் எனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டேன் என்று என்னிடம் ஒரு முறை தெரிவித்தார். 

அவரது மகளது படிப்பிற்காக இரண்டரை ஆண்டுகள் கோயமுத்தூரிலுள்ள  சாய்பாபா காலணி அருகில் தங்கியிருந்தார். இவர் காபி குடிப்பதல் நாட்டம் மிக்கவர். அவருக்குப் பிடித்தமான டபுள் ஸ்ட்ராங் காபியைப் பருகிக்கொண்டே அவருடன் பலமுறை உரையாடியிருக்கிறேன். Mountain starts from Ocean’ என்ற சொல்லை அவர் அடிக்கடி சொல்வார். இதே தலைப்பில் அருளகம் சார்பாக நிர்மலா மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு நடத்திய நாட்டுநலப் பணித்திட்டத்தில்  உரையாற்றியும் இருக்கிறார். நினைவுகள் மட்டுமே இப்போது மிச்சமுள்ளது. 

அவரது இறப்பிற்கு அருளகம் தனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தார் இந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வரவேண்டும். அவர் இயற்கையின் மடியில் இளைப்பாரட்டும்.

இன்று அவரது நினைவாக இராமேசுவரம் தீவில் 200 மரக்கன்றுகளையும் பனங்கொட்டைகளையும் நட்டு அருளகம் சார்பாக அவருக்கு அஞ்சலி செலுத்தினோம். 

 

ஆம் ‘Mountain starts from Ocean’. 

அன்புடன்

அருளகம் அமைப்பினர்

Arulagam expresses its condolences on the passing of Mr. Kannan (Former Secretary, Palani Hills Conservation Council).

Dear friends,

I received a phone call from Mr. MacMohan early this morning (4-11-2025). I could not believe it when he told me that Kannan sir, the former secretary of the Palani Hills Conservation Council (PHCC), had passed away. The reason was that I met him at his residence in Pattiveeranpatti the day before morning from 9.45 am to 11.45 am and talked for about two hours.

When I went to see him, a book called ‘The Book of Indian Butterflies’- by Isaac Kehimkar was on his table. After asking each other about our well-being, our conversation turned to the environment…the rising sea level, the impact of the groynes, butterflies, beekeeping, trips to Thailand and Sri Lanka, grandchildren, changes in rainfall, the impact of his father’s use of herbicides due to lack of manpower, and the younger generations seeking foreign education. The conversation continued with the trip to Sri Lanka at the invitation of Thiruvalar Sris Kantharaja, visits to Kilinochchi and Mullaitivu, and being a member of the Bee federation operating from Sweden.

He shared that when he was young, he would go to his aunt’s house in Chennai. And his aunt said that the Marina sea was about half a kilometer away then and that now it was just a short walk away.  I thought about it and agreed.

When we talked about food, he said that he had decided not to cook for just himself every single day, so the cook would come once in two days to make meals, and that he would only boil rice from time to time, and that he is 67, saying that he could only eat a small portions these days.

When we talked about his trip to Sri Lanka, he said that the Sri Lankan Porasu tree is three times larger in circumference than the Porasu tree growing in our village. I shared that I have the opportunity to go to Sri Lanka at the end of this month on the invitation of the International Pollution Elimination Network, and I asked him if he could also join me. He said that he would talk to Thiruvalar Sri in a day or two and let me know. I thought that he would get bored since my mother was also with me during our conservation, so I stopped and said that I have to go to participate in the sapling planting work being done in Rameswaram, and said goodbye.

While leaving, he stuffed three oranges into my bag, saying that they were pesticide-free fruits grown on his farm. As I was sitting on the window seat on the bus, the midday sun was scorching. And I was parched. When I tasted the oranges he brought from his bag, my teeth ached a little. It was refreshing. I immediately wiped my hands and took out my phone and sent him a text message saying, “The fruits are delicious and it was nice to chat with you.” I never thought that this would be the last message I would send him.

Mr. Kannan (67) studied pharmacology. But he was an expert in plants. He was knowledgeable about various things like plants that butterflies seek for nectar, plants that butterflies feed on. He was also deeply knowledgeable about growing saplings from an economic perspective.

When I was planting trees at Idinthakarai, he would come as an inspector to supervise it and point out mistakes. I learned a lot from him.

I would like to share an incident that he recalled to me. In 2007, various organisations had submitted project reports for planting saplings along the coast. Arulagam had also submitted one. He was the special invitee at the meeting held to select the organisations. At that meeting, he had raised the question that how Arulagam, which is an organisation based in Coimbatore, could plant trees at Idinthakarai in Tirunelveli and later told me that he changed his views after seeing Arulagam’s field work.

He had stayed near Saibaba Colony in Coimbatore for two and a half years for his daughter’s studies. He was a coffee drinker. I have talked to him many times while sipping his favourite double strong coffee. He often used to say the phrase ‘Mountain starts from Ocean’. He had also addressed a national service program organised by Arulagam for the students of Nirmala Women’s College on the same topic. Only memories remain now.

Arulagam expresses its condolences on his death. May his family, who are suffering from his separation, recover from this shock. May he rest in the lap of nature.

Today, in his memory, we paid tribute to him on behalf of Arulagam by planting 200 saplings and native trees on Rameswaram Island.

Yes, ‘Mountain starts from Ocean’.

With love

Arulagam Organisation

அருள் அவர்களின் 24 வது நினைவு நாள் நிகழ்வு, அக்டோர் 31 2025

அருள் அவர்களின் 24 வது நினைவு நாள் நிகழ்வு அக்டோர் 31 அன்று கோயமுத்தூரில் உள்ள அருளகம் அலுவலகத்திலும் கள அலுவலகமான இராமேசுவரத்திலும் கடைபிடிக்கப்பட்டது. 

இந்நிகழ்விற்கு கார்த்திகா இராஜ்குமார் தலைமை தாங்கி அருள் அவர்களுடன் தனக்கிருந்த நட்பையும் அவரது கலகக் குணத்தினையும் நினைவு கூர்ந்தார். 

 

தமிழ்நாடு அரசு இந்த ஆண்டை நாவல் மர ஆண்டாக அறிவித்ததை முன்னிட்டு அருளகம் பூந்தளிர்  நாற்றுப்பண்ணையில் நாவல் விதைகள் நடப்பட்டன. 

அருள் நினைவு நாளை முன்னிட்டு நாற்றுப்பண்ணையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையும் ஊதிய உயர்வும் வழங்கப்பட்டது.

 

இராமேசுவரத்தில் அருள் அவர்களின் 24 வது நினைவு நாளை முன்னிட்டு 24 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்விற்குத் தன்னார்வலர் அன்பு அவர்கள் முன்னிலை வகித்தார். அருளகம் பணியாளர்கள் அனைவரும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி மரக்கன்றுகளை நட்டனர்.

இந் நிகழ்வில்  அருள் அவர்களது புதல்வன் அவிநாசு முதல் முறையாகக் கலந்து கொண்டது கூடுதல் சிறப்பு. அவருக்குத் தோழர் இராம்மோகன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். ‘பாறு கழுகுகளைத் தேடி’ என்ற நூலை அருளகத்தின் செயலர் சு. பாரதிதாசன் வழங்கினார். 

 

அருள் அவரது  விருப்பத்திற்கு ஏற்ப குரலற்றவர்களின் குரலாக அருளகம் தொடர்ந்து இயங்கும் என உறுதி எடுத்துக்கொள்வோம்.

 

Palm Nut and Tree Planting Drive Held in Rameswaram | October 28 2025

Coimbatore-based Arulagam (Nature Conservation Organization), with the support of the United Nations Development Programme (UNDP) and The Energy and Resources Institute (TERI), and under the supervision of the Central and State Governments, has been carrying out sand dune conservation initiatives on Rameswaram Island. As part of this ongoing effort, native dune-associated plants and trees are being planted to protect and restore the fragile ecosystem.

 

 

Continuing this initiative, a palm seed and tree planting event was organized today (October 28) at the Rameshwaram Municipality’s Nambunayaki Amman Water Supply Station, under the guidance of the Rameshwaram Municipality Commissioner and Municipality Engineer. The program was jointly conducted by Arulagam (Nature Conservation Organization) and Annai Scholastica Women’s College, Pamban.

The event began with a welcome address by Mr. Amirthalingam, Treasurer of Arulagam. Plantation expert Mr. Yashok Kumar Sivasubramaniyam explained the ecological importance of sand dune vegetation and the biodiversity they support. Project Officer Mr. Natarajan briefed the students on planting techniques, environmental protection, and led them in taking a Sand Dune Conservation Pledge to promote awareness and commitment toward dune ecosystem protection.

Under the supervision of Mr. Mohammed Shahidh, Project Coordinator of the Sand Dune Conservation Project, students from Annai Scholastica College were divided into two teams and, along with workers from Arulagam’s Neithal Nursery, carried out the planting activities. Around 2,000 palm seeds and 400 saplings were planted along the dunes surrounding the Nambunayaki Amman Water Supply Station.

More than 130 students and faculty members participated in the event, reaffirming their commitment to protecting Rameswaram’s unique sand dune ecosystem.

இராமேஸ்வரத்தில் பனை விதை மற்றும் மரக்கன்றுகள் நடவு நிகழ்ச்சி | இராமேஸ்வரம், அக்டோபர் 28

கோயமுத்தூர் சார்ந்த அருளகம் (இயற்கைப் பாதுகாப்பு அமைப்பு), ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (UNDP) மற்றும் டெரி (TERI) நிறுவனங்களின் ஆதரவுடன், ஒன்றிய மற்றும் மாநில அரசின் மேற்பார்வையில் இராமேஸ்வரம் தீவில் மணல் மேடுகளைப் பாதுகாக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மணல் மேடுகளுக்கே உரிய தாவரங்கள், செடிகள், கொடிகள் மற்றும் மரங்களை நட்டு அவற்றைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, இராமேஸ்வரம் நகராட்சி, நம்புநாயகி அம்மன் நீரேற்று நிலையப் பகுதியில், நகராட்சி ஆணையாளர் மற்றும் பொறியாளர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இன்று (அக். 28) அருளகம் (இயற்கைப் பாதுகாப்பு அமைப்பு) மற்றும் அன்னை ஸ்கொலாஸ்டிக்கா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடவு மேற்கொண்டது.

 

நிகழ்ச்சியில் அருளகத்தின் பொருளாளர் திரு. அமிர்தலிங்கம் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து தாவரவியல் நிபுணர் திரு. யசோக் குமார் சிவசுப்பிரமணியம் அவர்கள் மணல் மேடுகளில் காணப்படும் தாவரங்களின் முக்கியத்துவம் மற்றும் அவை சார்ந்த பல்லுயிர் சூழலின் அவசியத்தைப் பற்றி விளக்கமளித்தார். பின்னர் திட்ட அலுவலர் திரு. நடராஜன் அவர்கள் மாணவிகளுக்கு நடவு முறைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்தார். பின்னர் மணல்மேடுகள் பாதுகாப்பு  உறுதி மொழியும் ஏற்றுக்கொண்டனர். 

 

 

 

அதனைத் தொடர்ந்து, மணல் மேடு பாதுகாப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. முஹம்மது ஷாஹித் அவர்களின் தலைமையில், அருளகத்தின் நெய்தல் நாற்றுப்பண்ணைப் பணியாளர்கள் மற்றும் மாணவிகள் இணைந்து இரண்டு அணிகளாகப் பிரிந்து பனை விதை மற்றும் மரக்கன்று நடவுப் பணிகளை மேற்கொண்டனர். இந்நிகழ்வில் சுமார் 2000 பனை விதைகள் மற்றும் 400 மரக்கன்றுகள் நம்புநாயகி அம்மன் நீரேற்று நிலையம் அருகிலுள்ள மணல் மேடுகளில் நட்டனர்.

 

இந்த நிகழ்வில் 130-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு மணல்மேடுகள் பாதுகாப்பு பணிகளில் தங்களது பங்களிப்பை வழங்கினர்.

Page 3 of 24

logo

'Arulagam' was founded in 2002 as a non-profit organisation in honour and memory of Mr. Arulmozhi, who inspired many of his friends, including ourselves – the members of Arulagam – through his commitment to environmental conservation. We believe that regardless of its value to humanity, every form of life and its ecosystem is unique.

Reach Us