காட்டு உயிரினங்களை மீட்பது & காயம்பட்ட உயிரினங்களுக்கு உயர் மருத்துவ சிகிச்சை மையம் | Coimbatore | Dec 2025

இடரில் உள்ள காட்டு உயிரினங்களை மீட்பது மற்றும் காயம்பட்ட உயிரினங்களுக்கு உயர் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக பெத்திக்குட்டையில் அமைக்கப்பட்ட மையத்தை மாண்புமிகு தமிழ்நாடு, துணை முதல்வர், திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கிவைத்தார். இந்நிகழ்விற்கு மாண்புமிகு அமைச்சர் முனைவர். ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் முன்னிலை வகித்தார்.  இந்நிகழ்வில் முனைவர். கணபதி.ப.ராஜ்குமார், அவர்கள், கோயமுத்தூர் பாராளுமன்ற உறுப்பினர், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் நிகராளிகளும்  கலந்து கொண்டனர்.

அரசு கூடுதல் தலைமைச் செயலர், திருமதி.சுப்ரியா சாகு, இ.ஆ.ப. , அவர்கள், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் & வனத்துறை, திரு. சீனீவாஸ். ரா.ரெட்டி, இ.வ.ப, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், வனத்துறைத் தலைவர் மற்றும் திரு.ராகேக்ஷ் குமார் டோக்ரா, இ.வ.ப., முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், & தலைமை வன உயிரினக் காப்பாளர் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வோடு இணைந்து வனக்காவலர்களுக்கு ஆயுதங்களை வழங்கும் நிகழ்வும், சாடிவயல் யானைகள் முகாம் திறப்பு விழா மற்றும் தமிழ்நாடு வனத்துறை ஆவணக் காப்பக சேமிப்பகம் திறப்பு விழாவும் ஒருங்கே நடைபெற்றது.

இந்நிகழ்வை கோயமுத்தூர் மாவட்ட வனக்கோட்டம் ஏற்பாடு செய்திருந்தது.

தமிழ்நாடு அரசின் காட்டுயிர் வாரிய உறுப்பினர் என்ற அடிப்படையில் வனத்துறை சார்பாக நடைபெற்ற இவ் விழாவில் கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.  அருளகத்தின் தலைவர் திரு.கார்த்திகா இராஜ்குமார் அவர்களும், பொருளாளர் அமிர்தலிங்கம் அவர்களும் கலந்துகொண்டனர்.

அடிபட்ட மற்றும் காயம்பட்ட விலங்குகளையும் பறவைகளையும் காப்பாற்ற இம் மையம் வருங்காலத்தில் குறிப்பிடத்தகுந்த பங்காற்றும் என்று நம்பலாம். அந்நிறுவனத்திற்குப் பொறுப்பாளராக கால்நடை மருத்துவர் விஜயராகவன் அவர்களை நியமித்துள்ளதை வரவேற்கிறோம்.

 

logo

'Arulagam' was founded in 2002 as a non-profit organisation in honour and memory of Mr. Arulmozhi, who inspired many of his friends, including ourselves – the members of Arulagam – through his commitment to environmental conservation. We believe that regardless of its value to humanity, every form of life and its ecosystem is unique.

Reach Us