பெரம்பலூரில் இயங்கிவரும் ‘பயிர்’ (PAYIR) அமைப்பு மிகச்சிறப்பான சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அர்ப்பணிப்பு உணர்வு மிக்க திரு. செந்தில், திருமதி பிரீத்தி தம்பதியரால் இவ்வமைப்பு நடத்தப்பட்டு வருகிறது.

அவ்வமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க, சுகாதாரப் பணியாளர்களுக்கான ‘மக்கள் பங்கேற்புடன் கூடிய கிராம மதிப்பீடு’ (Participatory Rural Appraisal – PRA) தொடர்பான முதற்கட்டப் பயிற்சி, திரு. நமச்சிவாயம் அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, அடுத்தகட்டப் பயிற்சியின் கோட்பாட்டு அமர்வுகள் அக்டோபர் 10, 11 ஆகிய நாட்களில் பெரம்பலூரில் உள்ள பயிர் அலுவலகத்திலும், நேரடி களப்பயிற்சி நக்கசேலம் கிராமத்திலும் நடைபெற்றன. இவற்றைத் திரு. அமிர்தலிங்கம், திரு. செந்தில் மற்றும் திரு. மணி ஆகியோர் சிறப்பாக வழிநடத்தினர்.

இந்நிகழ்வைப் பயிர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருமதி குந்தவை நாச்சியார் ஒருங்கிணைத்தார். மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் பயிர் அமைப்பு மேற்கொண்டு வரும் பணிகளை அருளகத்தின் செயலர் பார்வையிட்டுப் பாராட்டினார். மேலும், இதுபோன்ற நற்பணிகளைக் கோயமுத்தூரிலும் முன்னெடுப்பதற்கு இது பெரும் உந்துதலாக அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

The organization ‘PAYIR’, based in Perambalur, is carrying out commendable social work. It is run by a dedicated couple, Mr. Senthil and Mrs. Preethi.

At the request of the organization, an initial training session on ‘Participatory Rural Appraisal’ (PRA) for healthcare workers was conducted under the supervision of Mr. Namachivayam. Subsequently, the theoretical sessions for the next phase of training took place on October 10th and 11th at the PAYIR office in Perambalur, while the practical field training was held in Nakkasalem village. These sessions were effectively facilitated by Mr. Amirthalingam, Mr. Senthil, and Mr. Mani.

The event was coordinated by Mrs. Kundhavai Nachiyar, a coordinator at PAYIR. The Secretary of ‘Arulagam’ visited the organization and commended its efforts toward enhancing the learning capabilities of students. He further noted that these exemplary initiatives serve as a great inspiration for undertaking similar noble work in Coimbatore.