80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அருளகம் இயற்கைப் பாதுகாப்பு அமைப்பும் அப்ஸ்டீரிம் ஈகாலஜீ அமைப்பும் இணைந்து குன்னூர் -வெலிங்டன்- மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டர் (MRC) உட்பட்ட வயல் பகுதியில் இயற்கைச் சூழலை மீட்டெடுக்கும் பணியைத் தொடங்க உள்ளது. இந்நிகழ்வில் ஸ்டேட் ஸ்டீரிட் பணியாளர்கள் 50 பேர் தன்னார்வமுடன் கலந்துகொள்ள உள்ளனர்
நீர்நிலைகளில் வியாபித்துள்ள ஆக்கிரமிக்கும் அந்நியத் தாவர இனங்களை அகற்றி, அதற்குப் பதிலாக அப்பகுதியின் இயற்கைச் சூழலுக்கு ஏற்ற உள்நாட்டுத் தாவர இனங்களை நடவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

உள்நாட்டுத் தாவரங்கள், அதன் பல்லுயிர் முக்கியத்துவம் குறித்த கல்வி அறிவை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே இயற்கைப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இத்திட்டத்தின் மூலம் இராணுவப் பகுதியில் உள்ள இயற்கை வாழிடங்களை படிப்படியாக மீட்டெடுத்து, உள்ளூர் உயிரினங்கள் மற்றும் தாவரங்களுக்கான உகந்த வாழிடத்தை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்நிகழ்வை பிரிகேடியர் கிருஷ்ணேந்தி தாஸ் அவர்கள் தொடக்கிவைக்க உள்ளார். இயற்கைப் பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் வாழிடங்களை மீட்டெடுப்பதற்கான இந்த முயற்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஒரு முக்கியமான தொடக்கமாக அமையும் என்று நம்பலாம்

•
இதன் அடுத்தட்டமாக,தொடக்கப்பள்ளி வளாகத்தில் வண்ணத்துப்பூச்சித் தோட்டம் அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது.
