காட்டுயிர் நாளை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி | March 2026

திரு.  கிருபாசங்கர், கள இயக்குநர், முதுமலை புலிகள் சரணாலயம் அவர்களின் அறிவுரைப்படி, மசினகுடி வன அலுவலர் அதிகாரி திரு. வித்யராகவன் அவர்களின் தலைமையில், 25-03-2026 அன்று சீகூர் வனச்சரகத்தில் நடைபெற்றது. இதில் ஆனைகட்டிப் பழங்குடியின உண்டு உறைவிடப் பள்ளி (1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்கள்) மாணவர்கள் கலந்துகொண்டு காட்டுயிர்கள் குறித்த அறிவியல்பூர்வமானத் தகவலைத் தெரிந்துகொண்டனர்.

வனவிலங்குகள் மற்றும் இயற்கையின் முக்கியத்துவம் பற்றி  திரு. சுரேஷ் பாபு அவர்கள், சீகூர் வனச்சரகர் விளக்கமளித்தார். அவர் மாணவர்களுடன் அன்பாக கலந்துரையாடி, காடு, விலங்குகள், மரங்கள் மற்றும் இயற்கையின் நற்பயன்களை எடுத்துரைத்தார்.

 

பின்னர், அருளகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் செல்வி. சுந்தரி (Biologist) மற்றும் செல்வி, ரேவதி (Sociologist) ஆகியோர் கலந்து கொண்டு, அரிய நிலையிலுள்ள உயிரினங்கள், காட்டின் சிறப்புகள் மற்றும் பறவைகள் பற்றிய தகவல்களை வழங்கினர். குறிப்பாகப் பாறு கழுகுகள் (Vultures) பற்றி கேள்வி பதில் மூலம் மாணவர்களுடன் உரையாடினர். இறந்ததைத் தின்று இருப்பவற்றைக காக்கும் செயல் குறித்தும் பாறு கழுகுகள் வேட்டையாடுபவை அல்ல, என்றும், இயற்கையின் தூய்மை காவலர்கள்” என்றும் எடுத்துரைத்தனர். அவை ஓய்வு எடுக்கும் முறை, உணவு எடுத்துக்கொள்ளும் முறை, மற்றும் அவை தங்கள் உடலை சுத்தப்படுத்தி சூரிய வெப்பத்தில் உலர்த்துவதன் மூலம் கிருமிகளை அழிக்கும் தன்மை ஆகியவை விளக்கப்பட்டது.

“நான் பாறு கழுகுகளின் நண்பன்” என்ற ஸ்டிக்கர்கள் மாணவர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. அதனை ஆர்வமுடன் பெற்றுச்சென்றனர்.

பேரா. முனைவர். ராமகிருஷ்ணன் அவர்கள்,  துறைத்தலைவர், காட்டுயிர்கள் துறை. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உதகமண்டலம் யானைகளின் முக்கியத்துவத்தை படங்கள் மூலம் விளக்கினார். யானைகள் காடுகளை உருவாக்கும் முக்கிய உயிரினங்கள் என்றும், அவை விதைகளைப் பரப்பி, பல உயிரினங்களுக்கும் வாழ்வாதாரமாக இருப்பதாகவும் எடுத்துககூறினார்.

 

அதன்பின், மாணவர்கள் ஜகலிகடவு செல்லும் வழியில், களப்பயணம் சென்ற போது சுமார் 40 வயதுடைய தாய் யானையும், குட்டி யானையும் தண்ணீர் குடிக்க வந்ததை மாணவர்கள் கண்டு ரசித்தனர்.

இறுதியாக, திரு மசனன், வனவர் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

logo

'Arulagam' was founded in 2002 as a non-profit organisation in honour and memory of Mr. Arulmozhi, who inspired many of his friends, including ourselves – the members of Arulagam – through his commitment to environmental conservation. We believe that regardless of its value to humanity, every form of life and its ecosystem is unique.

Reach Us