Our Blog

T.N. government plans synchronised vulture census across Tamil Nadu, Kerala, Karnataka

The State-level Vulture Conservation Committee (SVCC) has decided to conduct a synchronised vulture census in Tamil Nadu, Kerala and Karnataka.

The census has been planned before March as the nesting season is in progress, Chief Wildlife Warden Srinivas Reddy said.

At the SVCC’s first meeting held on 25th Jan, other conservation plans such as operationalising rescue centers in Tirunelveli, Tiruchi and Coimbatore; designating a Vulture Safe Zone (VSZ) around the Mudumalai Tiger Reserve; and future strategies were discussed. “Since this was the first meeting, there were a lot of ideas that came from different members. The only concrete decision taken was about the census,” said Mr. Reddy. Around 60 villages, 20 each in Tamil Nadu, Kerala, and Karnataka, have been identified as hotspots based on vultures' feeding and nesting areas, and areas where there is a notable cattle-carnivore conflict, said S. Bharathidasan, secretary, Arulagam, a non-profit organisation working towards environmental conservation.

Mr. Bharathidasan, who is also a SVCC member, said proposals had been made for conducting animal welfare camps, sensitising people to ethical animal husbandry, providing opportunities for sales of pesticides using cow dung. He also said that designating the VSZ would be an important step in conservation. “Vulture Safe Zone is only a concept now; it must be legalized by the government so the do’s and don’ts can be implemented,” he said.

The SVCC consists of the Director of the Department of Animal Husbandry; the Director of Drugs Control, Food Safety and Drug Administration Department; experts; and NGOs working towards vulture conservation.

Mr. Bharathidasan said steps must be taken gradually for the entire State to become a safe zone for vltures, and not just around Mudumalai. He said the Drugs Administration Department’s action against drug suppliers and manufacturers and retailers of the banned veterinary drug, diclofenac, was commendable.

Training for Biomedical Waste Management

தடுப்பூசி மையங்களில் பல்வேறு வகையான ஆபத்தான கழிவுகள் உருவாகின்றன என்பது நாம் அறிந்ததே. இந்தக் கழிவுகள் ஏனைய கழிவுகளோடு கலக்கும்போது எல்லாமே மோசமான கழிவாக மாறும் ஆபத்து உண்டு. இதனைக் களைய தடுப்பூசிமையங்களில் கடைபிடிக்கவேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து பயிற்றுநர்களை உருவாக்குவதற்கான கூட்டம் இன்றும் நாளையும் (18 & 19, ஜனவரி, 2023) தமிழ்நாடு அரசு குடும்ப நல அமைச்சகத்தின் பயிற்சியாளர் மையத்தில் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அரசின் குடும்ப நல அமைச்சகத்தின் ஒத்துழைப்போடு உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலுடன் டாக்சிக் லிங்க் என்ற அமைப்பின் மேற்பார்வையில் அருளகம் அமைப்பு இந்நிகழ்வை ஒழுங்கு செய்துள்ளது.

Training of Trainers

மஞ்சள் முகமே வருக!

‘மஞ்சள் முகப் பாறு’ எனப்படும் ‘Egyptian vulture’ கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டிப் பகுதியில் பாறைப் பொந்தில் பத்தாண்டுகளுக்கு முன்னர் வசித்துவந்த செய்தியை வன அலுவலர் ஆனந்த், ஓய்வுபெற்ற வனப் பாதுகாவலர் கணேசன் ஆகியோர் என்னிடம் பகிர்ந்துகொண்டனர்.

தமிழகத்தில் இல்லாத நிலைக்குச் சென்றுவிட்ட மஞ்சள் முகப் பாறு, தற்போதும் அங்கு வாழ்கிறதா என்று பார்த்துவரவேண்டும் என்ற ஆவல் சில ஆண்டுகளாகவே இருந்தது. கரோனா பெருந்தொற்றின் தாக்கத்தால், அங்கே செல்வதற்கான வாய்ப்பு தள்ளிப்போய்க் கொண்டிருந்தது. ஒரு வழியாக அது அண்மையில் நிறைவேறியது.

Egyptian vulture

‘மஞ்சள் முகப் பாறு’ எனப்படும் ‘Egyptian vulture’ கிருட்டினகிரி மாவட்டம் அஞ்செட்டிப் பகுதியில் பாறைப் பொந்தில்  பத்தாண்டுகட்கு முன்னர் வசித்து வந்த செய்தியை வன அலுவலர் திரு ஆனந்த் அவர்களும் ஓய்வுபெற்ற வனத்துறைப் பாதுகாவலர் திரு கணேசன் அவர்களும் என்னிடம் பகிர்ந்து கொண்டனர். தமிழகத்தில் சுழியம் நிலைக்குச் சென்றுவிட்ட மஞ்சள் முகப்பாறு தற்போதும் அங்கு வாழ்கிறதா என்று பார்த்துவரவேண்டும் என்ற ஆவல் சில ஆண்டுகளாகவே எனக்குள் இருந்தது.  அவ்வப்போது சேலம் பகுதியிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் ஒன்றிரண்டு மஞ்சள் முகப்பாறுக் கழுகுகள் தென்படுவதும் எனது ஆர்வத்தைக் கிளறியபடி இருந்தது. ஒட்டுவாரொட்டி  எனப்படும் பெருந்தொற்றின் (Pandemic) தாக்கத்தால் அங்கு செல்வதற்கான வாய்ப்பு தள்ளிப்போய்க்கொண்டிருந்தது. ஒரு வழியாக அது சென்றவாரம் நிறைவேறியது. வனத்துறை அலுவலர் திருமிகு கார்த்திகேயனி அவர்கள் வழிகாட்டுதலுடன் வனத்துறை மருத்துவர் பிரகாசு அவர்கள் தலைமையில் பறவை அன்பர்கள் ஜோசப்ராஜா, மோகன்ராஜ், கார்த்திகேயன், ஜெயசங்கர் மற்றும் ஆகியோர் உடன்வந்தனர். ஆங்காங்கே நிறுத்திப் பறவைகளைப் பார்த்தபடி சென்றோம். தேன் பருந்து (Honey buzzard), லகுடு- (Kestrel), இராசாளி - Bonellis eagle, கருங்கழுகு - Black eagle ஆகியனவற்றையும் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. காட்டை ஊடறுத்துச் சென்ற பென்னாகரம் ஒகனேக்கல் சாலையின் வழியில் நரி ஒன்று தாவி ஓடியது. பல்லாண்டு இடைவெளிக்குப் பின்னர் நரி ஒன்றைப் பார்த்தது மகிழ்ச்சியைத் தந்தது. நரியின் ஊளைச் சத்தம் கேட்டு எவ்வளவு நாளாச்சு என்று பெருமூச்சும் கூடவே வந்தது. ஊளைச்சத்தம் எட்டாத தூரத்திற்குச் சென்றுவிட்ட கவலையுடன் அஞ்செட்டியை அடைந்தோம். பெரியதொரு பாறைக்கு முன் எங்களது வாகனம் நின்றது.  பாறையில் அமையப்பெற்ற பொந்தைக் காண்பித்து அங்குதான் மஞ்சள் முகப்பாறுகள் வாழ்ந்து வந்தன என உடன்வந்த வனக்காப்பாளர் கூறினார். தற்போது அவை அங்கு இருப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. வெண்மை நிறப்படிவாகத் தென்படும் பறவையின் எச்சம் கூடத் தென்படவில்லை. அந்த இடத்தைப் புறா (Blue Rock Pigeon) தன் வசப்படுத்தியிருந்தது. சாலரி - குங்கிலி - Shorea roxburghii எனப்படும் மரக்கூட்டம் வழியாகப் பயணித்துப் பாறையின் மறுபக்கத்தை அடைந்தோம். பெங்களூரு நகரம் காட்டை நெருக்கித் திமிறி எழுந்து ஆக்ரமித்து வருவதை அவதானிக்க முடிந்தது. தலைக்கு மேலே வெண்தோள் பருந்து (Booted eagle) ஒன்று இரை தேடிக் காற்றில் சறுக்கியபடி பறந்து சென்றது. கூடவே நான்கு ஊர்ப் பருந்துகளும் Black kite வானில் வட்டமடித்தபடி பறந்தன.   கீழே இறங்கி வந்தோம், கோயில் வேலை மும்முரமாய் நடந்து கொண்டிருந்தது.  கோயில் பூசாரியிடம் திரு. பசவராஜ் (54) உரையாடியபோது, நான்கு ஆண்டுகட்கு முன்புவரை இங்கு மஞ்சள் முகப் பாறுக் கழுகு இருந்தது எனச் சொன்னார்.  எனக்கு மூளையில் சிறு பொறி தட்டியது. இரை ஏதும் இங்கு இல்லாததால் இவை இடம்பெயர்ந்திருக்கலாம். தற்போது அவை பெங்களூரு அருகிலிருக்கும் இராமதேவர்பெட்டாவுக்கு இடம்பெயர்ந்திருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. அந்த இடத்தில் இவற்றின் உறவினர்கள் வசித்து வருவதை நான்கு ஆண்டுகட்கு முன்னர் அங்கு சென்றிருந்தபோது பார்த்திருக்கிறேன். மேலும் இங்கிருந்து அந்த இடம் வான்வழியாகச் சென்றால் சுமார் 30 கி,மீட்டர் தூரம் தான் இருக்கும். இந்தத் தொலைவு கழுகைப் பொருத்தவரை கூப்பிடு தூரம் தான். 

Egyptian Vulture Egyptian Vulture Egyptian Vulture

 Egyptian Vulture Egyptian Vulture

இயற்கையாக இறக்கும் காட்டுயிரினங்கள் புதைக்கப்படுவதும் எரிக்கப்படுவதும் தொடர்கதையாக இருக்கும்வரை அவை மீண்டு வரும் என்பது கானல் நீர்தான். உணவில்லாத இடத்தில் அவற்றுக்கு என்ன வேலை?. இரண்டு நாட்களுக்கு முன்னர் யானை ஒன்று இறந்து விட்ட செய்தியை அறிந்தோம். ஒருவேளை அங்கு சென்று பார்த்தால் அவற்றை உண்ண ஏதாவது வருவதற்கு வாய்ப்பிருக்கலாம் என்ற நப்பாசை மேலிட்டது. அடுத்த நாள் அங்கு சென்று பார்க்கலாம் என முடிவெடுத்து அதிகாலையில் கிளம்பி யானையைக் கிடத்திய இடத்தை அறிந்து அங்கு சென்று பார்த்தபோது, எங்களுக்குச் சோகமே மிஞ்சியது. ஆம் அதுவும் எரிக்கப்பட்டுப் பாதி எரிந்து கொண்டிருந்த சிதையைப் பார்த்து வருத்தம் தான் மேலிட்டது. யானையின் சடலத்தை உண்ணவந்த புழுக்களும் அந்தத் தீயில் எரிந்து சாம்பாலாயின. ஒரு மிகப்பெரிய உயிர்ச் சுழற்சியைத் தீயிலிட்டுக் கருக்கிவிட்டனர். இந்த அவலப்போக்கை மாற்ற வனத்துறை முழுமனத்தோடு ஒத்துழைத்தால் தான் உயிர்ச்சுழற்சியை மீட்க முடியும். 

தீவைத்து எரிப்பதை நியாயப்படுத்துவதற்காக, யாரேனும் விசம் வைத்துவிடுவார்கள், கெட்ட நாற்றமெடுக்கிறது, யானையின் எலும்பை யாராவது திருடிச் சென்று விடுவார்கள், நோய் பரவும் என்பன போன்ற காரணங்கள் அடுக்கப்படுகின்றன. இவற்றை நாம் மறுக்கவில்லை. ஆனால் முழுப் பூசணிக்காயையும் சோற்றில் மறைப்பது போல இறந்த யானையைப் புதைப்பதோ எரிப்பதோ வன்முறையான செயல் என்றே தோன்றுகிறது.  நல்ல நல்ல வனத்துறை அலுவலர்கள் இருக்கும்போதே இப்படி நடக்கிறது என்றால் யாரிடம் போய் முறையிடுவது. இந்த வருத்தம் மேலிடப்  புத்தாண்டில் இது குறித்துத் தொடர் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் உறுதி எடுத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டுக் கிளம்பினோம். 

அடுத்ததாக ஒரு பெரிய குத்துக்கல் பாறை ஒன்று இருக்கும் இடத்தை நோக்கி எங்களது வாகனம் சென்று நின்றது. தொலைநோக்கி வழியாக அளவளாவினோம். பாறையின் பிளவில் ஒரு இடத்தில் கொம்பன் ஆந்தை உட்கார்ந்து எங்களை நோட்டமிடுவது போல இருந்தது. அதை நீண்ட நேரம் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தோம். அரை மணி நேரம் ஆகியிருக்கும். திடீரென ஒரு ஐயம் ஏற்பட்டது. அது உண்மையிலேயே ஆந்தை தானா அல்லது உரு மாறு தோற்றப்பிழையா என்று. தொலைநோக்கியை முடுக்கினோம். வைத்தகண் மாறாமல் பார்த்தபோது இவ்வளவு நேரம் நாம் பார்த்து இரசித்தது ஒரு பாறையின் தோற்றமே அப்படி அமைந்திருக்கிறது எனத் தெரிந்து எங்களுக்குள் சிரித்துக்கொண்டே இடத்தை விட்டு நகர்ந்தோம்.

செல்லும் வழியில்,  ‘உரிகம்’ என்ற ஊரின் பெயர் கண்ணில் பட்டது. இந்த ஊர் ‘உரிகம் புளி’ என்ற அடைமொழியுடன் எனக்குத் தொண்ணூறுகளில் அறிமுகமாகி இருந்தது.  ‘புளி’ என்றால் புளியமரத்தினைக் குறிக்கும். அது என்ன ’உரிகம் புளி’ என்று வினவியபோது, உரிகம் என்பது அன்றைய தர்மபுரி மாவட்டத்தில் அமையப்பெற்ற ஒரு ஊர் எனவும் அந்த ஊரில் காணப்பட்ட ஒரு புளியமரம் நல்ல விளைச்சலையும் திரட்சியான கனிகளையும் கொண்டது என்பதால்  அந்த மரத்திலிருந்து விதையும் ஒற்றுக் கன்றுகளும் உருவாக்கப்பட்டு ஊர்ப்பெயரைக் கொண்டு அந்த இரகம் அழைக்கப்பட்டது என்பதையும் அறிந்துகொண்டேன்.  150 வயதான பழமையான இம் மரத்திலிருந்து  கன்றுகள் உருவாக்கப்பட்டுத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பெற்றது. அத்தகைய சிறப்புமிக்க அம் மரத்தைக் காணவேண்டும் என்ற ஆவல் எனக்கு இருந்தது. ஓரிரு முறை இந்த ஊருக்கு அருகாமையில் செல்ல நேர்ந்தபோதும் அம்மரத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டவில்லை. இந்த முறை, அந்த மரத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஊர்க்காரர்கள் வழிகாட்ட  மரம் இருக்கும் இடத்தை அடைந்தோம். நிறையப் புளிய மரங்கள் ஆங்காங்கே இருந்தன. அருகாமையில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த பெரியவர் ஒருவர் பல்வேறு புளியமரங்களுக்கிடையே உரிகம் புளி எனக் காரணப்பெயர்பெற்ற மரத்தைச் சுட்டிக்காட்டினார். தூரத்திலிருந்து பார்க்கும்போது மரம் தளதளவென இருந்தது. ஒரு காய் கூடக் கண்ணில் படவில்லை. ஆனால் அதே வேளையில் அருகாமையில் காணப்பட்ட புளியமரத்தில் காய்கள் காய்த்துத் தொங்கிக்கொண்டிருந்தன.  என்ன காரணம் என்று மரத்திற்கு அருகாமையில் சென்று பார்த்தபோது, மரத்தின் வேர்களைச் சுற்றித் தண்ணீர் நின்று கொண்டிருந்தது. உபயம் மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டத்தில் கட்டப்பட்ட தடுப்பணை என்பது புரிந்தது.

தடுப்பணையை வடிவமைக்கும்போது இதை எல்லாம் பார்ப்பதில்லை என்பது வருத்தமான செய்தி. அருகில் ஒரு பாரம்பரியமிக்க மரம் இருக்கிறது. அதுவும் புளியமரம் வறட்சியில் வளரும் ஒரு மரம். அதற்குத் தண்ணீர் தேங்கினால் என்ன ஆகும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் இப்பணி அரங்கேறியுள்ளது என்பது வருத்தப்படவைத்தது. எங்கு எளிமையாக வேலை செய்யமுடியுமோ கட்டுமானப் பொருட்களை எளிதில் எடுத்துச் செல்ல முடியுமோ அங்குத் தடுப்பணை அமைத்துவிடுகிறார்கள். இந்த இடத்தில் புளிய மரத்தின் மேல்புறம் ஒன்று கீழ்புறம் ஒன்று என இரண்டு தடுப்பணைகள் அமைக்கப்பட்டிருந்தன என்று சொல்வதை விட இந்த மரத்திற்குக் கல்லறை கட்டியிருந்தனர் என்று சொல்லலாம். இன்னும் சில ஆண்டுகளில் பாரம்பரியமிக்க அந்த மரமும் பட்டுப்போய் விடும் என்பதை நினைத்துப் பார்த்தேன். ‘புளி  ஆயிரம் பொந்து ஆயிரம்’ என்ற பழமொழியும் பொய்த்துப்போவதை உணர்ந்தேன்.
இதேபோலக் காட்டுக்குள்ளும் தடுப்பணை அமைத்த இடங்களின் அருகே இருந்த பெரிய பெரிய மரங்கள் குறிப்பாக ஆற்றோரத்தில் நன்கு வளரும் நீர் மத்தி மரங்களும் பட்டுப்போகி விட்டதைக் கண்ணுற்றிருக்கிறேன். 

அடுத்ததாக நாங்கள் பிதிரெட்டி எனும் ஊரை நோக்கிச் சென்றோம். காரணம், அங்கு ஆசியாவிலேயே பெரியதொரு ஆலமரம் இருப்பதைக் கேள்விப்பட்டு அதைப் பார்க்கும் ஆவல் மேலிடக் கிளம்பினோம். பார்த்து உண்மையிலேயே வியந்தோம். சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் வியாபித்திருந்தது அந்த ஆலமரம். தனது தோட்டத்தை அம்மரத்தின் வளர்ச்சிக்கு ஒதுக்கிய விவசாயியை மனமாறப் பாராட்ட வேண்டும். புள்ளி ஆந்தைகளும், சாம்பல் இருவாட்சிப் பறவைகளும் கண்ணில்பட்டன. அந்த மரத்தையும் வழமைபோலக் காதலர்கள் விட்டுவைக்கவில்லை. தங்களது பெயர்களை மரத்தைக் காயப்படுத்திக் கீறி எழுதி வைத்திருந்தனர். 

அருகாமையிலிருந்த புளியமரத்தை நோக்கினேன். குரங்குக்கூட்டம் புளியந்தளிர்களையும் காய்களையும் கடித்து வாயில் அதக்கிக்கொண்டிருந்தன. வயல்களில் இருந்தக் கேப்பைக் கதிர்களைக் குரங்குகள் சில வாயில் அதக்கிக் கொண்டிருந்தன. அதைப் பார்த்துக்கொண்டே நகர்கையில் சற்றுத் தொலைவில் ஒரு மின்கம்பத்தில்  கருகி ஒரு குரங்கு செத்துத் தொங்கியபடி உயிரை விட்டிருந்தது. இதே போல காடுகளுக்குள் ஊடறுத்துச் செல்லும் மின்கம்பங்களில் மாட்டி எத்துனை எத்துனை விலங்குகள் இறக்குமோ. தெரியாது. நம் கவனத்திற்கும் வராதது. எனவே இருக்கின்ற மின்கம்பங்களை எல்லாம் மின்சாரம் தாக்கா வண்ணம் வடிவமைக்க வேண்டும். ஆறறிவு படைத்த மனிதர்கள் என்பதை மனச்சாட்சியுள்ள மனித குலம் நிரூபிக்க வேண்டுமெனில் இது போன்ற செயல்கள்மூலம் தான் காட்ட வேண்டும். மாலை மயங்கிக்கொண்டிருந்தது.  பறவைகள் தங்குமிடத்தை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தன. வௌவால்கள் இரை தேடிப் பறக்க ஆரம்பித்தன. நிலவொளியில் அவற்றைப் பார்த்தபோது,  அந்தக் காட்சி உயிரினங்கள் பாதுகாப்பில் நாம் பயணிக்கவேண்டியது நீண்ட நெடுந்தொலைவு உள்ளது என்பதை உணர்த்தியது.

அன்புடன்,
சு.பாரதிதாசன்
செயலர், அருளகம்
உறுப்பினர், தமிழ்நாடு அரசு காட்டுயிர் வாரியம்
உறுப்பினர், பாறுக் கழுகுகள் பாதுகாப்புக் குழு, தமிழ்நாடு அரசு

Arul's Memorial Day

அருள் நினைவு நாளை முன்னிட்டு 31 நவம்பர் 2022 அன்று, குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுடன் சூழல் குறித்து கலந்துரையாடினோம். அரிய மரங்களுக்கான நாற்றுப்பண்ணை குமரகுரு கல்லூரி வளாகத்தில் செயல்படுவது குறித்து விளக்கம் அளித்தோம். எங்களது செயல்பாடுகளுக்கு உறுதுணையாய் இருந்து வரும் குமரகுருக் கல்லூரி நிர்வாகத்திற்கு நன்றியினையும் தெரிவித்தோம். சுமார் 60 மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கு கொண்டனர். விதை நடுவது பை நிரப்புவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர்.

 

 

 

Memorial Day   Memorial Day   Memorial Day

International Lead Poisoning Prevention Week of Action

Animation Lead poisoning: four things to know about lead (available soon in Arabic, English, French, Chinese, Spanish, Russian, Bahasa).

 

This video statement on the occasion of International Lead Poisoning Prevention Week 2022 by Dr Maria Neira, Director at the World Health Organization of the Department of Environment, Climate Change and Health.

பாறுக் கழுகுப் பாதுகாப்புப் பணிகள்

தமிழக அரசு பாறுக் கழுகுப் பாதுகாப்புக்கெனக் குழு ஒன்றை அமைத்துள்ளதை அருளகம் அமைப்பின் சார்பாகவும் பறவை அன்பர்கள் சார்பாகவும் மனதார வரவேற்கிறோம்.
2006- இல் ஒன்றிய அரசு முதன்முதலில் பாறுக் கழுகுப் பாதுகாப்பிற்கென செயல்திட்டம் ஒன்றை வெளியிட்டது. அதில் பல்வேறு அறிவுறுத்தல்கள் செயல்திட்டங்கள் சொல்லப்பட்டிருந்தன. அப்போதே மாநில அளவிலான குழு ஒன்றை அமைக்கவேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. பதினாறு ஆண்டுகட்குப் பின் இது நிறைவேறியுள்ளது. ஆட்சிப்பொறுப்பேற்ற ஒன்றரை ஆண்டுக்குள் இது நிறைவேற்றப்பட்டுள்ளது. 
இதற்காகத் தமிழக முதல்வரையும், வனத்துறை அமைச்சரையும், வனத்துறைச் செயலரையும், முதன்மை வனத்துறை அலுவலர், முதன்மைக் காட்டுயிர் பாதுகாவலர், கூடுதல் வனத்துறை அலுவலர் உள்ளிட்டோரையும் அருளகம் மனதாரப் பாராட்டுகிறது. குரலற்ற மனிதர்களுக்காக மட்டுமின்றி குரலற்ற உயிரினங்களுக்காகவும் இந்த அரசு இருக்கிறது என்பதை இது எடுத்தியம்புகிறது. வனத்துறைச் செயலர் ஆர்வமுடனும் அக்கறையுடனும் பாறுக் கழுகுப் பாதுகாப்புக்கு தமிழக அரசு என்ன செய்யவேண்டும் எனக் கேட்டறிந்தார். அவருக்கு அருளகம் சார்பாக எமது சிறப்பான நன்றியினை உரித்தாக்குகிறோம். இந்தியாவில் பாறுக் கழுகுப் பாதுகாப்பில் தொடர்ந்து முன்னோடி மாநிலமாகத் தமிழ்நாடு அரசு இருக்கிறது என்பதைப் பலரும் பாராட்டினர். பாறுக் கழுகுகள் பாதுகாப்புக்காக உலகெங்கும் நடைபெற்றுவரும் செயல்பாடுகள் குறித்து வரும் செய்தியிலும் இதைக் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளனர். இந்தப் பாராட்டெல்லாம் தமிழக அரசுக்குத் தான் சேரும். இன்னும் பல திட்டங்கள் செயல்வடிவம் பெறவேண்டும். உயிரினங்கள் பாதுகாப்பில் முன்னோடியாகத் தமிழகம் திகழவேண்டும் என்பது என் ஆவல்.

Government Order for APVC

Mr.Bharathidasan, Secretary of Arulagam, is inducted as a member of the Tamil Nadu State Action Plan for Vulture Conservation committee APVC. 

Click here to download the Government order for Tamil Nadu Action Plan for Vulture Conservation (APVC)

In a bid to prevent the declining vulture population in Tamil Nadu, the State Environment, Forest and Climate Change department have constituted a state-level committee to take comprehensive measures for vulture conservation. In a government order dated October 19, the committee will have 10 members, including the principal chief conservator of forests and chief wildlife warden, who will act as its chairman. The committee will have experts from the Wildlife Institute of India, the Salim Ali Centre for Ornithology and Natural History, and non-governmental organizations. The committee will ensure the implementation of an action plan for vulture conservation in the State.

Committee to prevent vulture extinction formed in TN 

Vulture CommitteeVulture Commitee

காட்டுயிர் வாரம்

காட்டுயிர் பாதுகாப்பை வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் இரண்டாம் நாள் முதல் எட்டாம் நாள் வரை காட்டுயிர் வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு அருளகம் அமைப்பின் சார்பாக நீலகிரி மாவட்டம் முதுமலைப் புலிகள் காப்பகத்திலுள்ள பொக்காபுரம், மாவினல்லா, செம்மநத்தம், எப்பநாடு ஆகிய ஊர்களில் வசிக்கும் பழங்குடிக் குழந்தைகளுடன்  காட்டுயிர் வாரவிழா கடந்த 4ம் தேதி முதல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியை அருளகம் அமைப்பினர் வனத்துறையுடன் இணைந்து முதுமலைப் புலிகள் காப்பக இயக்குநர் திரு வெங்கடேசு  மற்றும் துணைப் பாதுகாவலர் திரு. அருண்குமார் அவர்கள் வழிகாட்டுதலோடு ஒழுங்கு செய்திருந்தனர். 

அருளகத்தின் செயலர் சு. பாரதிதாசன் மாணவர்களுக்கு காட்டுயிர் கதைகளைச் சொல்லி உற்சாகப்படுத்தினார். நிகழ்வு குறித்து அவர் பேசும்போது, பாறுக் கழுகுகளின் வசிப்பிடத்திற்கு மிக அருகில் இருப்பதால் இந்த ஊர்களைத் தேர்ந்தெடுத்ததாகத் தெரிவித்தார். மேலும் பழங்குடிகளைப் பொருத்தவரை காடு, காட்டுயிர்கள் என்பது அவர்களின் வாழ்வியலோடும் பண்பாட்டோடும் தொடர்புடையது என்பதாலும் பழங்குடிக் குழந்தைகளுடன் காட்டுயிர் வார விழாக் கொண்டாடுவது பொருத்தமாய் இருக்கும் என்பதாலும் இந்நிகழ்வை ஏற்பாடு செய்ததாகத் தெரிவித்தார். 

Wildlife week

நிகழ்வில் யானை, கரடி, முயல், பாறுக் கழுகு ஆகியனவற்றைக் காகித அட்டையைக் கொண்டு முகமூடியாகச் செய்ய திரு. ஆழி வெங்கடேசன் அவர்கள் மாணவர்களுக்கு பயிற்றுவித்தார். அவர் சொல்லித்தருவதைப் பார்த்து மாணவர்களும் அதேபோலச் செய்து பழகினர். செல்வி. ஜோன்லிண்டன் அவர்கள் இயற்கைச் சாயங்களைக் கொண்டு வண்ணம் தீட்டுவது குறித்துப் பயிற்சி வழங்கினார். மாணவர்களும் தாங்கள் உருவாக்கிய முகமூடிக்கு வண்ணம் தீட்டி மகிழ்ந்தனர். தாங்கள் உருவாக்கிய முகமூடிகளைத் தங்களின் தலைகளில் மாட்டி விளையாடினர். 

தற்போது பழங்குடிக் குழந்தைகளுக்கும் காட்டுக்கும் உள்ள தொடர்பு குறைந்து வருவதாகவும் இதுபோன்ற நிகழ்வு மூலம் காட்டுயிர்கள் மேல் இளந்தலைமுறையினர் நேசம் கொள்ள வாய்ப்பு உள்ளதாகவும்  காட்டுயிர் ஆராய்ச்சியாளர் முனைவர் பி.ஏ. டேனியல் தெரிவிதார்.

நிகழ்வின் முத்தாய்ப்பாக விலங்குகளின் உருவ முகமூடியை மாட்டியபடி, ‘காப்போம் காப்போம்’, ‘காட்டுயிர்களைக் காப்போம்’,  ‘காப்போம் காப்போம், பாறுக் கழுகுகளைக் காப்போம்’ என்ற முழக்கத்தை எழுப்பியபடி ஊர்வலமாக வந்தனர். இதனைப் பார்த்து ஊர் மக்களும் வெகுவாக இரசித்தனர். 

நிகழ்ச்சிக்குத் தேவையானமுன்னேற்பாடுகளை மசினகுடி வனச்சரகர் திரு. என். பாலாஜி, சிங்காரா வனச்சரகர் திரு. ஜான் பீட்டர், வனவர்கள் ஸ்ரீராம், சித்தராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

காட்டுயிர் பாதுகாப்பு குறித்த துண்டறிக்கையினை அருளகம் சார்பாக பிரபு அவர்கள் ஊர் மக்களுக்கும் பங்கேற்றவர்களுக்கும் வழங்கினார்.

காட்டுயிர் வாரம் காட்டுயிர் வாரம்



 

Wildlife week Wildlife week

 

Subcategories

Page 3 of 13

logo

'Arulagam' was founded in 2002 as a non-profit organisation in honour and memory of Mr. Arulmozhi, who inspired many of his friends, including ourselves – the members of Arulagam – through his commitment to environmental conservation. We believe that regardless of its value to humanity, every form of life and its ecosystem is unique.

Newsletter

Subscribe to our newsletters to receive latest news and updates.
I agree with the Privacy policy