மாணவர்களுக்கான கோடைகால சிறப்பு பயிற்சி | May 2026
வணக்கம், கடந்த ஐந்து நாட்களாக நடந்து வரும் மாணவர்களுக்கான கோடைகால சிறப்பு பயிற்சியில் இன்று சிறப்பு விருந்தினராக தொரப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. கிருஷ்ணா மூர்த்தி மற்றும் ஆங்கில ஆசிரியர் திரு. தவசிமணி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த முகாமில் அவர்கள் மாணவர்களுக்கு சிறப்பு விழிப்புணர்வு செய்திகளை பரிமாறினர் இதில் முதலாக கல்வியும் முக்கியத்துவத்தை பற்றியும் பன்னிரண்டாம் வகுப்புக்கு பிறகு எந்த குரூப் எடுத்தால் எந்த துறையை சேரலாம், அது போன்ற மேல் கல்வி களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் புதிய மாணவர்கள் சேர்க்கைக்கான கல்வி விழிப்புணர்வுகளையும் மாணவர்களுடன் உரையாடினர்.

இந்த உரையாடல் மாணவர்களுக்கு மேலும் ஊக்குவிக்கும் வகையில் இருந்தது . தங்களின் நேரத்தை கொடுத்து அருளகம் சார்பில் நடந்து வரும் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவித்ததற்கு அருளகம் சார்பாக உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

