இராமேசுவரம் தங்கச்சிமடம் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் அருளகம் அமைப்புடன் இணைந்து இந்துசமய அறநிலையத்திற்கு சொந்தமான அருள்மிகு முனியசாமி கோவில் வளாகத்தில் பனை நடவை இன்று மேற்கொண்டனர். தமிழ்நாடு அரசின் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்ட

இத்திட்டத்தினை அருளகம் செயலர் சு. பாரதிதாசன், தங்கச்சிமடம் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித்திட்ட திட்ட அலுவலர், திரு.சுந்தர் உதவித் திட்ட அலுவலர் திரு.செந்தில்குமார், அருளகத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. பொன். நடராசு ஆகியோர் வழி நடத்தினர்.

இன்று 90 மாணக்கர்கள் இணைந்து 2000 பனை விதைகளை நட்டனர். தொடர்ந்து நெய்தல் சூழலுக்கேற்ற 300 மரச்செடிகளையும் நட்டனர்.
இந்த நிகழ்வுக்கு தேவையான ஏற்பாடுகளை அருளகம் சார்பில் திரு. அன்பு, திருமதி இராணி ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்வின் இறுதியில் அனைவரும் ஒன்றிணைந்து மணல்மேடுகள் பாதுகாப்பு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.