பழங்குடியினர் மாணவர்கள் இடைநிற்றலைத் தவிர்க்கவும் மனித விலங்கு எதிர்கொள்ளலைத் தவிர்க்கவும் தொடர்ச்சியாக அவர்கள் பள்ளி செல்வதை ஊக்குவிக்கவும் தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை 26 வாகனங்களை பழங்குடியினர் வசிக்கும் பல்வேறு மாவட்டங்களுக்கும் வழங்கியது. அதனைத்தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு .க ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

இதில் இரண்டு வாகனங்கள் அருளகம் அமைப்பு மேற்பார்வையில் நீலகிரி மாவட்டத்தில் கார்குடியிலும் பொக்காபுரத்திலும் அதனைச் சுற்றிலும் வசிக்கும் மாணவர்களைப் பள்ளியில் கொண்டு சேர்க்க உபயோகப்படுத்தப்படும்.
இதற்கு வழிவகுத்த தமிழ்நாடு முதல்வர் அவர்கட்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர் மாண்புமிகு மதிவேந்தன் அவர்கட்கும்
தமிழ்நாடு அரசுப் பழங்குடியினர் நலத்துறைச் செயலர் திருமதி ஜி. லட்சுமி பிரியா ஐ ஏ எஸ் அவர்கட்கும் இயக்குனர் சி. அண்ணாதுரை உள்ளிட்ட அனைவருக்கும் தனது திரளான நன்றியினை உரித்தாக்குகிறது. இது கல்வியில் ஒரு குறிப்பிடத்தக்க தொடக்கமாக அமையும். அத்துடன் மாணவர்களும் விலங்குகளும் இணக்கமாக அவரவர் வழியில் செல்லவும் இது வழி வகுக்கும்.இதன் மூலம் இயற்கை நேயமிக்க தலைமுறை உருவாகும் என்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சி.தொடரட்டும் அரும்பணி.
அன்புடன் அருளகம் அமைப்பினர்
