Publications   >>   Articles   >>   முதுபெரும் காட்டுயிரியலாளர் ஜே.சி. டேனியல்

முதுபெரும் காட்டுயிரியலாளர் ஜே.சி. டேனியல்

முதுபெரும் காட்டுயிரியலாளர்

நாட்டின் முதுபெரும் காட்டுயிரியலாளர் ஜே .சி. டேனியலுக்கு கடந்த மாதம் 80 வயது ஆனது. சர்வதேச அளவில் 'ஜே.சி.' என்று அறியப்படும் ஜீவநாயகம் சிரில் டேனியல் நாகர்கோவிலில் பிறந்தார். திருவனந்தபுரத்தில் வளர்ந்தார்.

வரலாறு

J.C.Danielஇளம் வயதிலேயே இயற்கையுடன் அவருக்கு இணக்கமான ஓர் உறவு ஏற்பட்டது. காட்டுயிர்கள் மீதான பிணைப்பை அவரது அன்னையும், கல்வித் தேடலை அவரது தந்தையும் தொடர்ந்து ஊக்குவித்தனர். இதன் காரணமாக, திருவனந்தபுரத்தில் இருந்த சிறந்த பொது நு£லகத்துக்கு அடிக்கடி சென்றார். இயற்கை உலகம் தொடர்பாக உற்சாகமாக கொப்பளித்து எழுந்த அவரது ஆர்வத்துக்கு தீனி போடும் வகையில், ஆப்பிரிக்க காட்டுயிர்கள் தொடர்பான புத்தகங்கள் அங்கு கிடைத்தன. சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்தார் .

டாக்டர் சாலிம் அலியின் பணியால் உத்வேகம் பெற்ற டேனியல், 40 ஆண்டுகளாக பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தில் பணியாற்றினார் (BNHS). 1950களில் காப்பாளராக பணியைத் தொடங்கிய அவர், 1991ம் ஆண்டில் அந்த கழகத்தின் இயக்குநராக (கழகத்தின் முதல் இயக்குநர்) ஓய்வு பெற்றார். அதற்குப் பிறகு, கௌரவ உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், தற்போது கௌரவச் செயலாளராக இருக்கிறார்.

யானைகள் பற்றி ஆராய்ந்தவர்களில் முதன்மையானவர். பறவைகள் வலசை போதல் பற்றி விரிவாக ஆராய்ச்சி செய்துள்ளார். நீர்நில வாழ்விகள் , ஊர்வன, பறவைகள், பாலுட்டிகள், அவற்றில் குறிப்பாக அழியும் ஆபத்தில் உள்ள ஆசிய யானை, காட்டு எருமை, புலி, வரையாடு, உப்புநீர் முதலை, கானமயில் போன்றவற்றையும், கோடியக்கரை, கிழக்குத் தொடர்ச்சி மலை, மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் உயர்ந்த பகுதிகள், சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தாரில் உள்ள தீபகற்ப காடுகளையும் ஆராய்ந்துள்ளார்.

உலக பாதுகாப்பு அமைப்பு, உலக ஊர்வன மாநாடு ஆகியவற்றிலும், குரங்கினம், ஆசிய யானை, முதலை, பாம்புகள் ஆகியவற்றுக்கான மதிப்புமிக்க நிபுணர்கள் குழுக்களிலும் இடம்பெற்றுள்ளார். இந்திய காட்டுயிர் நிறுவனத்தின் பயிற்சி, ஆராய்ச்சி, கல்வி குழுக்களில் இடம்வகித்துள்ளார்.

விருதுகள்

பீட்டர் ஸ்காட் பாதுகாப்பு விருது, சாஞ்சுவரி இதழ் வாழ்நாள் சாதனையாளர் விருது, ஆசிய யானைகள் பற்றி ஆராய்ந்ததற்காக கேரள வேளாண்மை பல்கலைக்கழக விருது, இந்திராகாந்தி பரியாவரன் புரஸ்கார் போன்றவற்றை பெற்றுள்ளார்.

புத்தகங்கள்

இந்திய ஊர்வன, ஒரு நூற்றாண்டு இயற்கை வரலாறு, வளர்ந்துவரும் நாடுகளில் பாதுகாப்பு ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார். புத்தகத்தில் சிங்கங்கள் பற்றிய பிரிவை எழுதியுள்ளார். சாலிம் அலியின் புத்தகத்தின் 12வது மறுபதிப்பைக் கொண்டு வந்தார். 1996ம் ஆண்டில் சாலிம் அலியின் நூற்றாண்டு மலரை தொகுத்துள்ளார். பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழக ஆய்வு இதழின் நிர்வாக ஆசிரியராக 37 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறார். இயற்கை ஆர்வலர்களுக்காக ஹார்ன்பில் என்ற இதழைத் தொடங்கினார். 2001ம் ஆண்டு இந்த இதழ் வெள்ளிவிழா கொண்டாடியது. தற்போது 31ம் ஆண்டாக வெளிவந்து கொண்டுள்ளது.

The Tiger in IndiaThe Leopard in IndiaThe Asian Elephant - A Natural HistoryThe Book of Indian Reptiles and AmphibiansBirds of the Indian Subcontinent - A Field Guide

Rachel CarsonThose who contemplate the beauty of the earth find reserves of strength that will endure as long as life lasts. There is something infinitely healing in the repeated refrains of nature -- the assurance that dawn comes after night, and spring after winter.

Rachel Carson, Silent Spring